Wednesday, 21 September 2011

பிணமாக வழங்கப்பட்டவர் பிழைத்தெழுந்தார்: மறுக்கும் தனியார் மருத்துவமனை நிர்வாகம்

 
உண்மை சம்பவம்

திருச்சி : திருச்சி, தனியார் மருத்துவமனையில் இறந்து விட்டதாக கூறி, பிணமாக மூடை கட்டி கொடுக்கப்பட்டவர், உயிர் பிழைத்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் தன்னேரி, 64. இவரது மனைவி கோமதி, 56. இலங்கையில் நடந்த கலவரத்தை தொடர்ந்து, 1985ம் ஆண்டு, மண்டபம் முகாமுக்கு வந்த இவர்கள், 1996ல் இருந்து திருச்சி கொட்டப்பட்டு, இலங்கை தமிழர் முகாமில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு ஜெயராணி என்ற மகளும், செவ்வந்தி செல்வன், சந்திரன், மோகன்தாஸ், 30, ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர். பெயின்டராக பணிபுரியும், இவர்களது மகன் மோகன்தாஸ், 15ம் தேதி இரவு நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார். திருச்சி கே.எம்.சி., தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, மூன்று நாட்கள் ஐ.சி.யூ.,வில் வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு, 7 மணிக்கு, அவர் இறந்து விட்டதாக கூறி, உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மோகன்தாஸ் இறந்ததை அறிந்து, வீட்டின் முன் பந்தல் போடப்பட்டு, ஐஸ் பெட்டியும் வரவழைத்தனர். ஊரெல்லாம் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது.

இதற்கிடையே, மருத்துவமனையில் இருந்து மோகன்தாஸ், ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார். திடீரென அவரது கை, கால்கள் அசையவே, அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், நேரடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மோகன்தாசின் அண்ணி சாந்தி கூறியதாவது:திருச்சி அரசு மருத்துவமனைக்குதான், மோகன்தாசை முதலில் கொண்டு சென்றோம். அதற்குள் இரண்டு முறை, மோகன்தாசுக்கு வலிப்பு வந்து, காதில் ரத்தமும் வந்தது.டாக்டர்கள் எங்களுக்கு சரியாக பதில் அளிக்காததால், பயந்துபோன நாங்கள், உடனடியாக திருச்சி கே.எம்.சி., மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவரை ஐ.சி.யூ., வார்டுக்கு கொண்டு சென்றனர். நேற்று முன்தினம் வரை தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாக கூறி, மருந்து, மாத்திரைகளை வாங்கி வர கூறினர்.ஒரு லட்ச ரூபாய் செலவழித்த பின்னும், அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதை தெரிவிக்கவில்லை. நாங்கள் வற்புறுத்தவே, நேற்று முன்தினம் இரவு, பிணமாக எங்களிடம் வழங்கினர். அவர் இறந்து விட்டதாக சான்றிதழும் கொடுத்தனர்.

ஆம்புலன்சில் ஏற்றியபோது தான், மோகன்தாசுக்கு உயிர் இருப்பது தெரிந்தது. இதற்குபிறகும் அந்த மருத்துவமனையில் இருக்கக்கூடாது என்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டோம்.இங்கு வந்தவுடன் தனியார் மருத்துவமனையை சேர்ந்த சிலர், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தாளில் கையெழுத்து கேட்டு, எங்களை மிரட்டுகின்றனர். நாங்கள் போட மறுத்துவிட்டோம். இதுபோன்று பணம் பறிக்கும் மருத்துவமனைகள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சாந்தி கூறினார்.

இதுகுறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கூறியதாவது: உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மோகன்தாஸ், ஐ.சி.யூ.,வில் வெண்டிலேட்டர் உதவியுடன் வைக்கப்பட்டிருந்தார். மூன்று நாட்கள் அப்படியே சிகிச்சை பெற்றதால், "இறந்த பிணத்தை வைத்து சிகிச்சை கொடுக்கிறீர்கள். நாங்கள் வெளியிடத்தில் சிசிச்சை செய்கிறோம்' என, அவரது உறவினர்கள் தகராறு செய்தனர். அதனால், மருத்துவ ஆலோசனைக்கு எதிராக, "அகைன்ஸ்ட் மெடிக்கல் அட்வைஸ்' என, மோகன்தாஸ் தந்தை தன்னேரி, அண்ணன் செவ்வந்தி செல்வனிடம் கையெழுத்து வாங்கி, உயிருடன் தான் கொடுத்தோம்.தற்போது, திருச்சி அரசு மருத்துவமனையில், அதே வெண்டிலேட்டர் உதவியுடன் தான் மோகன்தாஸ், உயிரோடு இருக்கிறார். எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அவதூறு பரப்புகின்றனர்.இவ்வாறு நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டது.

what is your thought About this video


Monday, 19 September 2011

ஓ ஈழம்” (த‌மிழ் ஈழ விடுதலைப் போராட்ட‌த்தின் வ‌ர‌லாறு) – திரு. குமார் பருடைக்கட்டி


நான் ஏன் இந்திய சுதந்திர தினத்தை புறக்கணிக்கின்றேன் ………
காசுமீர் தேசத்தை சீர்குலைத்து, இந்திய இராணுவத்தின் மூலம் அம்மக்களை கொலை செய்து, கற்பழித்து, காணாமல் போகச் செய்த‌தற்காக(தொடர்ந்து செய்து வருவதற்காக‌…

உலகிலேயே மிக நீண்ட போர் நிறுத்த ஒப்பந்தமான இந்திய யூனியனுக்கும் நாகாலாந்து விடுதலைப்போராளிகளுக்கும் இடையான ஒப்பந்தத்தை மீறி, அவர்களை பேச்சுவார்த்தை என்று கூறி வரவழைத்து கொலை செய்ததற்காக‌

இந்தியாவின் வட-கிழக்கு மாகாணங்களில் இந்திய இராணுவம் செய்யும் கொலைகள், பாலியல் வன்முறைகளுக்காக….உலகிலேயே மிக நீண்ட அகிம்சா போராட்டமான ஐரோம் சர்மிளாவின் பதினொரு ஆண்டு கால உண்ணாவிரதப் போராட்டத்தை கண்டும் காணாமல் நாடகமாடிவருவதற்காக‌

இந்தியாவின் மையப் பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடிகளை பணக்கார முதலாளிகளை மேலும் வளர்ப்பதற்காக திட்டமிட்டு கொலை செய்தும், அவர்கள் மண்ணை விட்டு அப்புறப்படுத்தியதற்காக‌
 
இந்திய இராணுவத்தினால் கண்டுபிடிக்கப்பட்டு 3 விரல்கள் வெட்டப்பட்ட‌ நக்சல் தீவிரவாதி

 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் நவீன கொத்தடிமை முறைகளை உருவாக்கி, தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறித்ததற்காக‌

நீதி என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்பொழுதுமே கிடைக்காது என்று உறுதி செய்யும் உச்ச நீதி மன்றம் அமைப்பிற்காக…உதாரணங்கள்: போபாலில் அமெரிக்க நிறுவனம் செய்த திட்டமிட்ட கொலைக்கு இன்னும் நீதி வழங்காமல் இருப்பது, கயர்லாஞ்சி படுகொலையை ஏதோ கோபத்தில் ஒருவன் செய்ததாக தீர்ப்பு வழங்கியது. பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு போன்றவைகளுக்காக…

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதை சட்ட மூலமாக வைத்துக்கொண்டு தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களையும், நிரபராதிகளையும் தண்டித்து வருவது (உதாரணம்…இதுவரை தூக்குதண்டனை வழங்கப்பட்டவர்களில்  பெரும்பாலோர் ஏதுமற்ற ஒடுக்கப்பட்ட மக்களே)

உச்ச நீதிமன்றம் அத்தி பூத்தாற் போல வழங்கிய தீர்ப்பான “வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு உணவுப் பொருளை இலவசமாக வழங்கு” என்று கூற உணவுப் பொருள் அழுகிப் போனாலும் பரவாயில்லை நாங்கள்(அரசு) ஏழைகளுக்கு உணவை இலவசமாக கொடுக்க மாட்டோம் என்று கூறி தன் சொந்த குடிகளை பட்டினிக் கொலை செய்ததற்காக‌
தெலங்கானா என்ற தனி மாநிலத்திற்காக தங்கள் இன்னுயிரை பல நூறு மக்கள் ஈந்த பின்னரும் அவர்களது கோரிக்கையை மதியாமல் இருப்பதற்காக‌

ஒரு மாநிலத்திற்கு அண்டை மாநிலம் பிரச்சனை செய்யும் பொழுது அதற்கு தீர்வு காணாமல் அந்த எரியும் பிரச்சனைக்கு எண்ணெய் ஊற்றி குளிர்காய்ந்ததற்காக (முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு).

தன் சொந்த குடிகளில்(மீனவன்) 500க்கும் அதிகமான மக்களை இன்னொரு
நாட்டின் இராணுவம் சுட்டுக் கொன்றும், பல நூறு மக்களை ஊனப்படுத்தியும் வருவதை கண்டும் காணாமல் வாய் பொத்தி மௌனமாக இருப்பதற்காக…

வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் சமூகத்தின் ஒரு சாரார் மட்டும் வளரக்கூடிய வீக்கத்திட்டங்களை போட்டு தன் சொந்த குடிகளின் வாழ்வாதாரத்தை அழித்ததற்காக….(விவசாயிகளின் பட்டினிச் சாவில் இந்தியா முதலிடம்….)

சாதிய ரீதியிலான வன்முறைகளை இனவாத(Racisim) வன்முறை பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று உலக அரங்கில் போராடி சாதிய வன்முறையாளர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக‌

சிறுபான்மை மக்களை பெரும்பான்மையினர் படுகொலை செய்த பொழுது அதை தடுக்காமல், அந்த சிறுபான்மை இன மக்களையே கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்திவருவதற்காக……(மும்பை தாக்குதல், கோத்ரா தாக்குதல்…..)

இவை மட்டுமின்றி அண்டை நாடுகளில் எழும் சனநாயக போராட்டங்களையும், மக்கள் விடுதலைப்போர்களிலும் தலையிட்டு அங்கு ஒரு இனப்படுகொலையை நடத்த உதவியதற்காக (பர்மா விடுதலைப் போராட்டம், ஈழ விடுதலைப் போராட்டம், நேபாள மக்கள் விடுதலைப் போராட்டம்)

 பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை போன்றவற்றையும், குடிநாயக வெளிகளுக்குட்பட்டு போராடும் உரிமை போன்ற உரிமைகளை வெறும் காகிதத்தில் மட்டும் உள்ளதற்காக (பினாயக் சென் போன்ற மனித உரிமையாளர்களை கைது செய்தது, ஆந்திராவில் பத்துக்கும் மேற்பட்ட மனித உரிமையாளர்களை கொலை செய்தது போன்ற…)

 
இந்தியர்கள் அனைவரும் என் உடன்பிறந்த சகோதர, சகோதரிகளாக நான் உண்மையாக கருதுவேயானால் அவர்களை இந்த நாடு தொடர்ந்து கொலை செய்து, கற்பழித்து, காணாமல் போகச் செய்து, வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரில் புறக்கணிக்குமானால், நான் இந்த சுதந்திர தினத்தை புறக்கணிப்பதை தவிர வேறு வழியில்லை, இது தான் ஒரு குடியின் முக்கியமான கடமையாக நான் கருதுகின்றேன்…
இவ்வாறு எனது கருத்தை வெளியிட்டதற்காக நான் கைது செய்யப்படலாம்..இது தான் சுதந்திரம்…..அரசுகளுக்கான சுதந்திரம்…மக்களுக்கானது அல்ல. மக்களுக்கான சுதந்திரம் மக்கள் புரட்சியின் மூலமே கிடைக்கும்…

சிந்துவெளி நாகரிகம்


தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு, தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். தமிழர்கள் கட்டிய தமிழர்  கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. தமிழனுக்க...ும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம். உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் புதிய ஆராய்ச்சிக் கருத்துகள் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றன.
புதிய இந்த ஆய்வுக் கருத்துகளை நாம் அறிந்து கொள்ளும் முன். நம் நாட்டிலேயே மிகவும் பழமை வாய்ந்த சிந்துவெளிக்கும் பழந்தமிழருக்குமுள்ள நெருக்கமான உறவை அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனரே. இவற்றையாவது முதலில் தெரிந்து கொள்ள வேண்டாமா? அறிஞர்கள் கூறுவது என்ன என்பதைக் காண்போம்.
சிந்துவெளி நாகரிகம்:
சிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம் என்பதை ஆய்வுகள் பல வெளிப்படுத்தி வருகின்றன.
நான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சிந்துவெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுவோர் பலர் உள்ளனர். ஆனால். சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு முரணாக உள்ளது.
சிந்துவெளி நாகரிகம் பற்றி அவர் கூறுவன:
1. ஆரியர் நகர வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர். நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர். கிணறு, குளியலறை, கழிவு நீர் வடிகால் உள்ள வீடுகளால் அவர்கள் நகரம் நிறைந்திருந்தது.
2. ரிக் வேதத்தில் இரும்பு பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துவெளியில் வெள்ளி உபயோகத்தில் இருந்தது. கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் இரும்பு பயன்பாட்டில் இல்லை.
3. வேதங்கள் மூலம் வில், அம்பு, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்களும் தலைக் கவசங்களும் பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துசமவெளியில் ஆயுதங்கள் இருந்தன. ஆனால் தற்காப்புக் கருவிகள் காணப்படவில்லை.
4. மீன் பற்றி வேதங்களில் அதிக அளவில் குறிப்பிடப்படவில்லை. சிந்து சமவெளியில் மீன் அதிக அளவில் உள்ளது.
5. வேதங்களில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை சுட்டப்பட்டுள்ளது; சிந்துசமவெளியில் குதிரை பற்றிய ஆதாரம் கிடைக்கவில்லை.
6. வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது.
7. வேதத்தில் புலி பற்றி சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது. சிந்துவெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.
8. சிந்துவெளி கடவுளர் கொம்புகளுடன் காட்டப்பட்டுள்ளனர்; ஆனால் வேதங்களில் அப்படி காணப்படவில்லை.
9. சிந்துவெளியில் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை வேதங்களில் இழிவாகச் சொல்லப்படுகின்றன.
10. சிந்துவெளியில் காணப்படும் களிமண் முத்திரையில் உள்ள வண்டிகளில் ஆரங்களுடன் கூடிய சக்கரங்கள் காணப்படவில்லை. ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் இரதங்களின் சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன.
11. சிந்துவெளியில் சுவத்திக (Swastik) அடையாளம் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது. ஆனால் வேதங்களில் அதைப் பற்றிய குறிப்புகள் கூட காணப்படவில்லை.
12. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர். ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும் குறைவான இடத்தையே பெற்றுள்ளனர்.
சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்த மார்ஷல். ஹீராஸ். கமில்சுவலபில் மற்றும் இரஷ்ஷிய. பின்லாந்து. அமெரிக்க அறிஞர்கள் பலர் இதுதிராவிட நாகரிகம்எனக் கூறியுள்ளனர்.
கணிப்பொறி ஆய்வு (Computer analysis) சிந்துவெளி மொழி அமைப்பு திராவிட மொழி அமைப்பே என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்கிறார் ஐராவதம் மகாதேவன். (Indian Express - Madras - 5 August 1994).
சிந்துவெளி மொழி குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்த அறிஞர் அஸ்கோ பர்ப்போலா இது திராவிட மொழி என்று விளக்குவது குறிப்பிடற்குரியது.
அண்மைக் காலங்களில். டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா ஆகியோர் சிந்துவெளி எழுத்துகள் தமிழே என்ற தம் ஆய்வு முடிவைத் தெரிவித்துள்ளனர்.
சிந்துவெளி நாகரிகம் திராவிடரின் நாகரிகம் என்று கூறும் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளியின் காலம்ரேடியோ கார்பன் ஆய்வுப்படி’ (Radio carbon dating) கி.மு. 7000க்கு முற்பட்டது எனக் கூறியுள்ளார்.
Fr. ஹீராஸ் ‘Studies in Proto - Indo - Mediterranean Culture’ எனும் புத்தகத்தில் சிந்துவெளி திராவிட நாகரிகத்திற்கும் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கிச் செல்கிறார். சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத் தமிழருக்கும் உள்ள உறவை அவர் எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடற்குரியது. (Rev. Fr. Heras. Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953). 1953இல் வெளியிடப்பட்டுள்ள அவருடைய Studies in Proto Indo Mediterranean Culture’ எனும் இந்த நூலுக்குப் பின் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலரும் சிந்துவெளிக்கும் பழந் தமிழருக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளைப் பல கோணங்களிலும் எடுத்துக்காட்டி வருகின்றனர்.
தமிழர்கள் உலகில் எங்கு சென்றாலும் தம்முடைய தொன்மையான வாழ்விடமான பழந்தமிழக ஊர்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் வழிபாட்டையும், ஆன்மீகக் கருத்துகளையும் எடுத்துச் சென்று கொண்டேதான் இருக்கின்றனர் என்பதை அவர்கள் பரவியுள்ள நாடுகளிலும் இடங்களிலும் உள்ள பெயர்களும் சொற்களும் வெளிப்படுத்துவதை. 'சொல்லாய்வுஃ. 'பெயராய்வுஃகள் வெளிப்படுத்துகின்றன.
சிந்துவெளி மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர் எனும் கருத்து அறிஞர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றபோதிலும் பூம்புகார் குறித்த ஆய்வு தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது.
பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்' என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் .சோ. விக்டர் அவர்களின் எழுத்துகளும் உலக நாடுகளில் காணப்படும் தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் எடுத்துக்காட்டும் ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகளும் தமிழின், தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளப் பெருந் துணை புரிகின்றன. அவர்களுடைய ஆய்வுகளை முழுவதும் படிப்பதற்கு முன்னோட்டமாக அவர்கள் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் (முன்னாள் ஒரிசா மாவட்ட ஆட்சியர்) அவர்கள் 'சிந்துசமவெளி நாகரிகமும் சங்கத் தமிழ் இலக்கியமும்ஃ எனும் தலைப்பில் அளித்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு:
1. சிந்துவெளி மற்றும் ஹரப்பாவில் ''கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்
புலப் பெயர்வுகளும் ஊர்ப் பெயர்களும்
'நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின்