Monday, 19 September 2011

'ராஜீவின் யோக்கியத்தனம் என்ன?


தோழர்களுக்கு வணக்கம், 


கடந்த இரண்டு வார கால நிகழ்வுகளை நீங்கள் கவனித்து வந்திருப்பீர்கள். 
     # பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் இவர்களின் கருணை மனுக்கள் நிராகரிப்பு
     # வக்கீல்கள் உண்ணாநிலைப் போராட்டம்
     # தூக்கிற்கு நாள் குறிப்பு
     # செங்கொடி தீக்குளிப்பு
     # போராட்டங்கள் பரவியது
     # சட்டப்படி தூக்கு இடைக்கால நிறுத்திவைப்பு

என்று வேகவேகமாக எல்லாம் முடிந்துவிட்டன. நமக்கு 8 வாரங்கள் கால இடைவெளி (இப்போதைக்கு 6 வாரங்கள்). 
இந்த இடைவெளிக்குள்ளாக மக்கள் மனதை திசைதிருப்பும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது காங்கிரஸ் மற்றும் அதன் கூலியாட்கள். 

ராஜீவ்காந்தி பற்றி மட்டுமே பேசிவந்த இவர்கள் இப்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்,  உடன் பலியான மற்ற தமிழர்களைப் பற்றியும், அவர்களது குடும்பத்திலுள்ளவர்களையும் முன்னிருத்தி, மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிரான மக்கள் மனநிலையை மாற்றிவிட முனைகின்றனர்.

மேலும், ராஜீவ்காந்தியை ஒரு தன்னலமற்ற தலைவராகவும்(!), மாசற்ற மாமனிதனாகவும்(!) ஆக்கும் முயற்சிகள் காலங்காலமாக நடந்தே வந்திருக்கின்றன. இந்திய ஆங்கில ஊடகங்களும் இந்த 'ராஜீவ் பிம்பத்தை' மிக அதிகமாகக் கையாண்டு வருவதும் நீங்கள் அறிந்திருக்கக் கூடியதுதான்.

இந்த நிலையில், 'நிரபராதிகள்' என்கிற நமது போராட்ட வாதத்தையும் தாண்டி,  'ராஜீவின் யோக்கியத்தனம் என்ன?' என்பது பற்றியும் பேசவேண்டியுள்ளது. இதுபற்றி கடந்த 20 ஆண்டுகாலத்தில் பெருமளவில் நாம் விவாதிக்க மறந்துவிட்டது, இவர்களுக்கு வசதியாகப் போய்விடுகிறது. 

*கொண்டாடுகிற அளவிற்கு அப்படி ராஜீவ் என்ன உத்தமரா?
*தமிழர்களைக் காப்பாற்றவா அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பினார்?

இதுபோன்ற கேள்விகள் மற்றும்

*அவர் எவ்வளவு நல்ல மனுஷன், அவரை இப்படிக் கொன்றுவிட்டார்களே!

என்பது போன்ற பிம்பங்களுக்கு ஆராய்ந்து பதிலளிக்க வேண்டிய நிர்பந்தம், நமக்கு முன்னே இருக்கிறது. 
அதை முறையாகப் பதிவு செய்ய, வரும் திங்கள் மாலை,

செப் 19 | திங்கள் கிழமை | மாலை 5:30 மணி | லயோலா கல்லூரி | பி.எட்.அரங்கில், 
பின்வரும் தலைப்பில் அரங்கக் கூட்டம் நடைபெற இருக்கிறது. 

போர்க்குற்ற வரலாற்றில் - இராசீவ்காந்தியும் இராசபக்சேவும்!

மறக்காமல், நண்பர்களுடன் வந்து பங்கெடுங்கள்.

No comments:

Post a Comment