Monday, 19 September 2011

ஓ ஈழம்” (த‌மிழ் ஈழ விடுதலைப் போராட்ட‌த்தின் வ‌ர‌லாறு) – திரு. குமார் பருடைக்கட்டி


நான் ஏன் இந்திய சுதந்திர தினத்தை புறக்கணிக்கின்றேன் ………
காசுமீர் தேசத்தை சீர்குலைத்து, இந்திய இராணுவத்தின் மூலம் அம்மக்களை கொலை செய்து, கற்பழித்து, காணாமல் போகச் செய்த‌தற்காக(தொடர்ந்து செய்து வருவதற்காக‌…

உலகிலேயே மிக நீண்ட போர் நிறுத்த ஒப்பந்தமான இந்திய யூனியனுக்கும் நாகாலாந்து விடுதலைப்போராளிகளுக்கும் இடையான ஒப்பந்தத்தை மீறி, அவர்களை பேச்சுவார்த்தை என்று கூறி வரவழைத்து கொலை செய்ததற்காக‌

இந்தியாவின் வட-கிழக்கு மாகாணங்களில் இந்திய இராணுவம் செய்யும் கொலைகள், பாலியல் வன்முறைகளுக்காக….உலகிலேயே மிக நீண்ட அகிம்சா போராட்டமான ஐரோம் சர்மிளாவின் பதினொரு ஆண்டு கால உண்ணாவிரதப் போராட்டத்தை கண்டும் காணாமல் நாடகமாடிவருவதற்காக‌

இந்தியாவின் மையப் பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடிகளை பணக்கார முதலாளிகளை மேலும் வளர்ப்பதற்காக திட்டமிட்டு கொலை செய்தும், அவர்கள் மண்ணை விட்டு அப்புறப்படுத்தியதற்காக‌
 
இந்திய இராணுவத்தினால் கண்டுபிடிக்கப்பட்டு 3 விரல்கள் வெட்டப்பட்ட‌ நக்சல் தீவிரவாதி

 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் நவீன கொத்தடிமை முறைகளை உருவாக்கி, தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறித்ததற்காக‌

நீதி என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்பொழுதுமே கிடைக்காது என்று உறுதி செய்யும் உச்ச நீதி மன்றம் அமைப்பிற்காக…உதாரணங்கள்: போபாலில் அமெரிக்க நிறுவனம் செய்த திட்டமிட்ட கொலைக்கு இன்னும் நீதி வழங்காமல் இருப்பது, கயர்லாஞ்சி படுகொலையை ஏதோ கோபத்தில் ஒருவன் செய்ததாக தீர்ப்பு வழங்கியது. பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு போன்றவைகளுக்காக…

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதை சட்ட மூலமாக வைத்துக்கொண்டு தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களையும், நிரபராதிகளையும் தண்டித்து வருவது (உதாரணம்…இதுவரை தூக்குதண்டனை வழங்கப்பட்டவர்களில்  பெரும்பாலோர் ஏதுமற்ற ஒடுக்கப்பட்ட மக்களே)

உச்ச நீதிமன்றம் அத்தி பூத்தாற் போல வழங்கிய தீர்ப்பான “வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு உணவுப் பொருளை இலவசமாக வழங்கு” என்று கூற உணவுப் பொருள் அழுகிப் போனாலும் பரவாயில்லை நாங்கள்(அரசு) ஏழைகளுக்கு உணவை இலவசமாக கொடுக்க மாட்டோம் என்று கூறி தன் சொந்த குடிகளை பட்டினிக் கொலை செய்ததற்காக‌
தெலங்கானா என்ற தனி மாநிலத்திற்காக தங்கள் இன்னுயிரை பல நூறு மக்கள் ஈந்த பின்னரும் அவர்களது கோரிக்கையை மதியாமல் இருப்பதற்காக‌

ஒரு மாநிலத்திற்கு அண்டை மாநிலம் பிரச்சனை செய்யும் பொழுது அதற்கு தீர்வு காணாமல் அந்த எரியும் பிரச்சனைக்கு எண்ணெய் ஊற்றி குளிர்காய்ந்ததற்காக (முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு).

தன் சொந்த குடிகளில்(மீனவன்) 500க்கும் அதிகமான மக்களை இன்னொரு
நாட்டின் இராணுவம் சுட்டுக் கொன்றும், பல நூறு மக்களை ஊனப்படுத்தியும் வருவதை கண்டும் காணாமல் வாய் பொத்தி மௌனமாக இருப்பதற்காக…

வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் சமூகத்தின் ஒரு சாரார் மட்டும் வளரக்கூடிய வீக்கத்திட்டங்களை போட்டு தன் சொந்த குடிகளின் வாழ்வாதாரத்தை அழித்ததற்காக….(விவசாயிகளின் பட்டினிச் சாவில் இந்தியா முதலிடம்….)

சாதிய ரீதியிலான வன்முறைகளை இனவாத(Racisim) வன்முறை பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று உலக அரங்கில் போராடி சாதிய வன்முறையாளர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக‌

சிறுபான்மை மக்களை பெரும்பான்மையினர் படுகொலை செய்த பொழுது அதை தடுக்காமல், அந்த சிறுபான்மை இன மக்களையே கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்திவருவதற்காக……(மும்பை தாக்குதல், கோத்ரா தாக்குதல்…..)

இவை மட்டுமின்றி அண்டை நாடுகளில் எழும் சனநாயக போராட்டங்களையும், மக்கள் விடுதலைப்போர்களிலும் தலையிட்டு அங்கு ஒரு இனப்படுகொலையை நடத்த உதவியதற்காக (பர்மா விடுதலைப் போராட்டம், ஈழ விடுதலைப் போராட்டம், நேபாள மக்கள் விடுதலைப் போராட்டம்)

 பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை போன்றவற்றையும், குடிநாயக வெளிகளுக்குட்பட்டு போராடும் உரிமை போன்ற உரிமைகளை வெறும் காகிதத்தில் மட்டும் உள்ளதற்காக (பினாயக் சென் போன்ற மனித உரிமையாளர்களை கைது செய்தது, ஆந்திராவில் பத்துக்கும் மேற்பட்ட மனித உரிமையாளர்களை கொலை செய்தது போன்ற…)

 
இந்தியர்கள் அனைவரும் என் உடன்பிறந்த சகோதர, சகோதரிகளாக நான் உண்மையாக கருதுவேயானால் அவர்களை இந்த நாடு தொடர்ந்து கொலை செய்து, கற்பழித்து, காணாமல் போகச் செய்து, வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரில் புறக்கணிக்குமானால், நான் இந்த சுதந்திர தினத்தை புறக்கணிப்பதை தவிர வேறு வழியில்லை, இது தான் ஒரு குடியின் முக்கியமான கடமையாக நான் கருதுகின்றேன்…
இவ்வாறு எனது கருத்தை வெளியிட்டதற்காக நான் கைது செய்யப்படலாம்..இது தான் சுதந்திரம்…..அரசுகளுக்கான சுதந்திரம்…மக்களுக்கானது அல்ல. மக்களுக்கான சுதந்திரம் மக்கள் புரட்சியின் மூலமே கிடைக்கும்…

No comments:

Post a Comment