Monday, 14 November 2011

"என் விரோதிகளை நான் சமாளித்துக்கொள்கிறேன். என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்''

"என் விரோதிகளை நான் சமாளித்துக்கொள்கிறேன்.
என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்''
பொருள்:
  • நண்பர்கள் துரோகம் செய்வார்கள் என இதற்குப் பொருளில்லை.
  • நண்பர்களை நாம் ஏற்கிறோம், ஆதரிக்கிறோம். எதற்காக நாம் அவர்களை ஆதரிக்கின்றோமோ, அது நமக்குத் துன்பமாய் முடியும்.
  • மகன் செய்வதை விட்டுக்கொடுக்க முடியாது என்றால் மகன், குடும்பம் அழியும் காரியங்களைச் செய்வான். மகனை விடமுடியவில்லை என்றால் குடும்பம் அழியும். அதுபோன்றவர்கள் நண்பர்கள்.
  • பூரண யோகத்தை ஒருவர் மேற்கொண்டால் அவர் செய்வனவற்றிற்கெல்லாம் எதிராக ஒருவர் evil persona அவரை வந்தடைவார் என ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.
  • அப்படி ஒரு நண்பரில்லாவிட்டால் அது நம்முள்ளேயே இருக்கும். அதிலிருந்து தப்ப முடியாது. திருவுருமாற்றத்தை ஏற்காவிட்டால் நாமே நம்மை அழித்துவிடுவோம்.

No comments:

Post a Comment